>

Tuesday, June 09, 2009

விசேட செய்தி - முகாமின் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறி வவுனியா புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது புலிகளின் கைவரிசையா..?

வவுனியா மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய முகாமான ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் வெடித்துச் சிதறி வவுனியாவையும் அதனை அண்மதித்த பகுதிகளிலும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதுடன் வவுனியா நகரப் பகுதி எங்கும் புகைமண்டமாகமாகக் காட்சி தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்

Saturday, June 06, 2009

இலங்கை தொடர்பான கூற்றுக்கு இந்தியா எதிர்ப்பு

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ள கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட அமர்வுகளின் போது உறுப்பு நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அதன் ஆணாயளர் நவனீதம்பிள்ளை உதாசீனம் செய்துள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து அதன் தலைவரே விமர்சனம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகத்தின் சுயாதீனத் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளதாக பேரவையின் இந்தியாவிற்கான பிரதிநிதி கோபிநாதன் அச்சுமுகலனால்கரி தெரிவித்துள்ளார்.

இந்த பாசக்காரபயலுகல நெனச்சா புல்லரிக்குதப்பா..

Thursday, June 04, 2009

சோனியா - இந்தியா - எதிரியை நம்பு துரோகியை நம்பாதே.

Pls right click to view large

"உலகின் அதிகார மையங்களின் கைப்பாவையாக இலங்கை இனவாத அரசு" - றிச்சார்ட் டிக்சன் - ரெலிகிறாவ்

ஆசியாவைத் தாக்கி அயிரக்கணக்கானவர்களைப் பலி கொண்ட போது நாங்கள் எல்லோரும் அழுதோம்.

சுனாமி ஆசியாவைத் தாக்கிய போது முப்பதாயிரம் பேர் உடனடியாக மாண்டனர். கடலால் அடித்துச் செல்லப்பட்ட அந்தக்கணத்திலேயே அவர்கள் தங்கள் தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டனர். அவர்களுடைய இறுதி அத்தியாயம் மிகச் சுருக்கமானது.

பிரதானமான தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தி அலைவரிசைகள் வாரத்தின் ஏழு நாட்களும் நாளின் 24 மணித்தியாலங்களும் சுனாமியின் கோரத்தைக் காட்டிக் கொண்டே இருந்தன. நாங்கள் உதவிப் பொருட்களைப் பொதி பண்ணி அருகிலுள்ள தேவாலயத்திற்கு அல்லது பாடசாலைக்கு எடுத்துச் சென்றோம். உலகின் பல நாடுகள் பில்லியன் கணக்கான உதிவியைச் செய்தன.

ஆனாலும் இன்னமும் தமிழ் மக்கள் கண்ணீருடன் இரண்டாம் தரப் பிரஜைகளாகத் தான் இருக்கின்றனர்.

இப்போது இலங்கையின் படுகொலைக்களத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுவர்களும் வலிமிகுந்த மரணத்தை எதிர்கொண்டிருந்த போது உலகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தது.

இன்னொரு பேரழிவு அண்மையில் இலங்கைத் தமிழர்களைத் தாக்கியது. அது பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு நடாத்தப்பட்ட போராக இருந்தது. மனித குல வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான துரோகத்தனமிக்க போராக இது இருந்தது. இதில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முப்பதாயிரம் பேர் அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

கண்ணீர்த்துளி போன்ற இந்தத் தேசத்தில், சுனாமி ஏற்படுத்தய அழிவை விட அதிகமான பேரழிவை இந்த யுத்தம் ஏற்படுத்தியது.

மாதக்கணக்காக உணவும் மருந்தும் இன்றி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். சீனாவின் எப்.7 விமானங்களிலிருந்தும், ரஸ்யாவின் மிக் விமானங்களிலிருந்தும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் போடப்பட்ட குண்டுகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கனரக ஆட்லறிகளும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் இந்த நிர்க்கதியான மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. பலர் வலிமிகுந்த மரணத்தை எதிர்கொண்டார்கள். காயமடைந்த பொதுமக்கள் தற்காலிக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவ்வைத்தியசாலைகள் குண்டுவீச்சுக்கிலக்கானதில் கொல்லப்பட்டனர். நோயாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டுமென்றே உணவும் மருந்தும் மறுக்கப்பட்டன. பயங்கரங்;களுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த பயங்கரங்களுக்கெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சாட்சியமானாhர்கள்.

உலகின் சில அதிகார சக்திகளின் பின்னணியுடன் மனிதரால் உருவாக்கப்பட்ட இந்த சுனாமிக்கு மேற்கின் செய்தி அலைவரிசைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஊடக மற்றும் விளையாட்டுப் பிரதிநிதிகள் ஆசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து வறுமையை ஒழிப்பது பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வந்தார்கள். ஆனால் இந்த அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சுண்டு விரலைத் தானும் அவர்கள் அசைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதில் ஐநாவின் ஊழல் மிகுந்த தலைவர்கள் தமது கடமையில் தவறி இருந்தார்கள். அவர்கள் தவறானவர்களால் வழி நடத்தப்பட்டார்கள். அவ்வறான தாளத்திற்கு அவர்கள் ஆடினார்கள். ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான சாத்தியமிருந்தும் அவர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொள்ளும் இந்த மர்ம விளையாட்டின் ஒரு பகுதியினரானார்கள். இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கான சக்தி பலரிடம் இருந்தும் அவர்கள் அதனைச் செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதனைச் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.

பல நாடுகளின் தலைவர்களும் ராஜதந்திரிகளும் இந்தப் போரின் போது எவ்வாறு செயற்பட்டார்கள் என்று பார்த்தால் அது குறித்து பலத்த சந்தேகம் எழும். அவர்களில் பலர் இந்த உலகத்தில் இல்லாதவர்கள் போன்று செயற்பட்டும் எழுதியும் இருப்பார்கள்.

மேலும்

Wednesday, June 03, 2009

கருணாநிதிக்கு இன்று 86வது பிறந்த நாள் விழா.... ஒரு பார்வை

பிராமணர் அல்லாதவர்களுக்கான ஜஸ்டிஸ் பார்ட்டி என்றழைகக்ப்பட்ட நீதிக்கட்சியும் அதனுடைய தொடர்ச்சியாக திராவிடர் கழகமும் உடையாமல் போயிருந்தால் கருணாநிதி என்கிற இந்த மூத்த அரசியல் தலைவர் உருவாகியிருக்க முடியாது. தேர்தல் அமைப்பை நிராகரித்த திராவிடர் கழத்திலிருந்து அண்ணாதுறை பிரிந்து திமுகவைத் துவங்கிய போது அதுதான் கருணாநிதி அடுத்த ஐமப்து ஆண்டுகளுக்கான அரசியல் தேராக இருந்து இன்று குடும்பத்துக்கான பாதுகாப்புப் பெட்டகமாகவும் மாறியிருக்கிறது.

கிட்டத்தட்ட எழுபதாண்டுகளுக்கும் மேலான திராவிட இயக்க அரசியல் பின் புலம் கொண்ட இந்தத் தலைவரைப் போல வேறு எந்த ஒரு தலைவரும் தமிழகத்தில் இதுவரை விமர்சிக்கப்பட்டதில்லை.

வாரிசு அரசியல், மாநிலக் கொள்கைகளை கைவிடல், தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தல், பதவி மோகம் என பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளாகும் கருணாநிதி இந்த வயதிலும் தள்ளாமல் போராடும் குணம் கொண்டவர். செய்ய நினைக்கும் வேலையை என்ன விலை கொடுத்தேனும் வெல்கிற வித்தையை இவரிடம் யாராவது கற்றுக் கொண்டிருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.

ஐந்தாவது முறையாக முதல்வர் ஆகியிருக்கும் கருணாநிதி வயது முதுமையால் பலவீனமாக இருக்கிறார். ஆனால் அவரது திமுக என்னும் கட்சி புத்தெழுச்சி பெற்றது போன்ற தோற்றத்துடன் இருக்கிறது. உண்மையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை திமுக கைப்பற்றியிருந்தாலும் திமுகவிற்கு விழுந்த எதிர்ப்பு வாக்குகளே அதிகம். விஜயகாந்த் கணிசமான வாக்கு வங்கியை பிரிக்க வெற்றிக் காற்று திமுகவின் பக்கம் வீசியது என்பதுதான் உண்மை. ஆனால் ஒரு தலைவர் பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே வெள்ளோட்டம் விட்ட தேர்தல்தான் இது. ஏற்கனவே திருமங்கலத்தில் பெற்ற வெற்றியை மாடலாக வைத்து இந்த தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி. அந்த பாணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வது போல திமுக ஆட்சி என்பது தமிழகத்தில் மைனாராட்டி ஆட்சிதான் காங்கிரஸ் தயவில்தான் மாநிலத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால் மத்தியில் புதிய ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் கட்சியோ இன்று திமுகவின் தயவில் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் இன்று கூட்டணிககான பொதுச் செயல் திட்டம் எதையும் உருவாக்கவில்லை என்பதோடு. எந்த மாநிலக் கட்சிகளையும் அது ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. திமுகவையும் நினைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் ஆளும் கருணாநிதியோ அதை ஒரு மெஜாரிட்டி அரசு போல நடத்திக் கொண்டிருப்பதுதான் அவரது அரசியல் சாணக்கியத்தனம். மத்தியிலும் மாநிலத்திலும் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதன் மூலம் திமுகவை பலம் பொறுந்திய கட்சியாக காட்டிக் கொண்டிருப்பதும். அவரை எதிர்த்து அரசியல் செய்வதற்கான நிதானமோ, சாணக்கியத்தனமோ ஜெயலலிதாவிடம் இல்லாமல் இருப்பதும்தான் கருணாநிதியின் வெற்றிக்குக் காரணம்.

மேலும்