>

Thursday, June 04, 2009

"உலகின் அதிகார மையங்களின் கைப்பாவையாக இலங்கை இனவாத அரசு" - றிச்சார்ட் டிக்சன் - ரெலிகிறாவ்

ஆசியாவைத் தாக்கி அயிரக்கணக்கானவர்களைப் பலி கொண்ட போது நாங்கள் எல்லோரும் அழுதோம்.

சுனாமி ஆசியாவைத் தாக்கிய போது முப்பதாயிரம் பேர் உடனடியாக மாண்டனர். கடலால் அடித்துச் செல்லப்பட்ட அந்தக்கணத்திலேயே அவர்கள் தங்கள் தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டனர். அவர்களுடைய இறுதி அத்தியாயம் மிகச் சுருக்கமானது.

பிரதானமான தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தி அலைவரிசைகள் வாரத்தின் ஏழு நாட்களும் நாளின் 24 மணித்தியாலங்களும் சுனாமியின் கோரத்தைக் காட்டிக் கொண்டே இருந்தன. நாங்கள் உதவிப் பொருட்களைப் பொதி பண்ணி அருகிலுள்ள தேவாலயத்திற்கு அல்லது பாடசாலைக்கு எடுத்துச் சென்றோம். உலகின் பல நாடுகள் பில்லியன் கணக்கான உதிவியைச் செய்தன.

ஆனாலும் இன்னமும் தமிழ் மக்கள் கண்ணீருடன் இரண்டாம் தரப் பிரஜைகளாகத் தான் இருக்கின்றனர்.

இப்போது இலங்கையின் படுகொலைக்களத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுவர்களும் வலிமிகுந்த மரணத்தை எதிர்கொண்டிருந்த போது உலகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தது.

இன்னொரு பேரழிவு அண்மையில் இலங்கைத் தமிழர்களைத் தாக்கியது. அது பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு நடாத்தப்பட்ட போராக இருந்தது. மனித குல வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான துரோகத்தனமிக்க போராக இது இருந்தது. இதில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முப்பதாயிரம் பேர் அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

கண்ணீர்த்துளி போன்ற இந்தத் தேசத்தில், சுனாமி ஏற்படுத்தய அழிவை விட அதிகமான பேரழிவை இந்த யுத்தம் ஏற்படுத்தியது.

மாதக்கணக்காக உணவும் மருந்தும் இன்றி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். சீனாவின் எப்.7 விமானங்களிலிருந்தும், ரஸ்யாவின் மிக் விமானங்களிலிருந்தும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் போடப்பட்ட குண்டுகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கனரக ஆட்லறிகளும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் இந்த நிர்க்கதியான மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. பலர் வலிமிகுந்த மரணத்தை எதிர்கொண்டார்கள். காயமடைந்த பொதுமக்கள் தற்காலிக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவ்வைத்தியசாலைகள் குண்டுவீச்சுக்கிலக்கானதில் கொல்லப்பட்டனர். நோயாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டுமென்றே உணவும் மருந்தும் மறுக்கப்பட்டன. பயங்கரங்;களுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த பயங்கரங்களுக்கெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சாட்சியமானாhர்கள்.

உலகின் சில அதிகார சக்திகளின் பின்னணியுடன் மனிதரால் உருவாக்கப்பட்ட இந்த சுனாமிக்கு மேற்கின் செய்தி அலைவரிசைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஊடக மற்றும் விளையாட்டுப் பிரதிநிதிகள் ஆசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து வறுமையை ஒழிப்பது பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வந்தார்கள். ஆனால் இந்த அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சுண்டு விரலைத் தானும் அவர்கள் அசைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதில் ஐநாவின் ஊழல் மிகுந்த தலைவர்கள் தமது கடமையில் தவறி இருந்தார்கள். அவர்கள் தவறானவர்களால் வழி நடத்தப்பட்டார்கள். அவ்வறான தாளத்திற்கு அவர்கள் ஆடினார்கள். ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான சாத்தியமிருந்தும் அவர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொள்ளும் இந்த மர்ம விளையாட்டின் ஒரு பகுதியினரானார்கள். இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கான சக்தி பலரிடம் இருந்தும் அவர்கள் அதனைச் செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதனைச் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.

பல நாடுகளின் தலைவர்களும் ராஜதந்திரிகளும் இந்தப் போரின் போது எவ்வாறு செயற்பட்டார்கள் என்று பார்த்தால் அது குறித்து பலத்த சந்தேகம் எழும். அவர்களில் பலர் இந்த உலகத்தில் இல்லாதவர்கள் போன்று செயற்பட்டும் எழுதியும் இருப்பார்கள்.

மேலும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home