>

Wednesday, June 03, 2009

கருணாநிதிக்கு இன்று 86வது பிறந்த நாள் விழா.... ஒரு பார்வை

பிராமணர் அல்லாதவர்களுக்கான ஜஸ்டிஸ் பார்ட்டி என்றழைகக்ப்பட்ட நீதிக்கட்சியும் அதனுடைய தொடர்ச்சியாக திராவிடர் கழகமும் உடையாமல் போயிருந்தால் கருணாநிதி என்கிற இந்த மூத்த அரசியல் தலைவர் உருவாகியிருக்க முடியாது. தேர்தல் அமைப்பை நிராகரித்த திராவிடர் கழத்திலிருந்து அண்ணாதுறை பிரிந்து திமுகவைத் துவங்கிய போது அதுதான் கருணாநிதி அடுத்த ஐமப்து ஆண்டுகளுக்கான அரசியல் தேராக இருந்து இன்று குடும்பத்துக்கான பாதுகாப்புப் பெட்டகமாகவும் மாறியிருக்கிறது.

கிட்டத்தட்ட எழுபதாண்டுகளுக்கும் மேலான திராவிட இயக்க அரசியல் பின் புலம் கொண்ட இந்தத் தலைவரைப் போல வேறு எந்த ஒரு தலைவரும் தமிழகத்தில் இதுவரை விமர்சிக்கப்பட்டதில்லை.

வாரிசு அரசியல், மாநிலக் கொள்கைகளை கைவிடல், தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தல், பதவி மோகம் என பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளாகும் கருணாநிதி இந்த வயதிலும் தள்ளாமல் போராடும் குணம் கொண்டவர். செய்ய நினைக்கும் வேலையை என்ன விலை கொடுத்தேனும் வெல்கிற வித்தையை இவரிடம் யாராவது கற்றுக் கொண்டிருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.

ஐந்தாவது முறையாக முதல்வர் ஆகியிருக்கும் கருணாநிதி வயது முதுமையால் பலவீனமாக இருக்கிறார். ஆனால் அவரது திமுக என்னும் கட்சி புத்தெழுச்சி பெற்றது போன்ற தோற்றத்துடன் இருக்கிறது. உண்மையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை திமுக கைப்பற்றியிருந்தாலும் திமுகவிற்கு விழுந்த எதிர்ப்பு வாக்குகளே அதிகம். விஜயகாந்த் கணிசமான வாக்கு வங்கியை பிரிக்க வெற்றிக் காற்று திமுகவின் பக்கம் வீசியது என்பதுதான் உண்மை. ஆனால் ஒரு தலைவர் பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே வெள்ளோட்டம் விட்ட தேர்தல்தான் இது. ஏற்கனவே திருமங்கலத்தில் பெற்ற வெற்றியை மாடலாக வைத்து இந்த தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி. அந்த பாணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வது போல திமுக ஆட்சி என்பது தமிழகத்தில் மைனாராட்டி ஆட்சிதான் காங்கிரஸ் தயவில்தான் மாநிலத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால் மத்தியில் புதிய ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் கட்சியோ இன்று திமுகவின் தயவில் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் இன்று கூட்டணிககான பொதுச் செயல் திட்டம் எதையும் உருவாக்கவில்லை என்பதோடு. எந்த மாநிலக் கட்சிகளையும் அது ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. திமுகவையும் நினைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் ஆளும் கருணாநிதியோ அதை ஒரு மெஜாரிட்டி அரசு போல நடத்திக் கொண்டிருப்பதுதான் அவரது அரசியல் சாணக்கியத்தனம். மத்தியிலும் மாநிலத்திலும் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதன் மூலம் திமுகவை பலம் பொறுந்திய கட்சியாக காட்டிக் கொண்டிருப்பதும். அவரை எதிர்த்து அரசியல் செய்வதற்கான நிதானமோ, சாணக்கியத்தனமோ ஜெயலலிதாவிடம் இல்லாமல் இருப்பதும்தான் கருணாநிதியின் வெற்றிக்குக் காரணம்.

மேலும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home