>

Sunday, May 24, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பதமநாதன் தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்
மேலும்

Tuesday, May 19, 2009

இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு மாபெரும் படுகொலை

இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு மாபெரும் படுகொலையே நடந்து முடிந்திருக்கிறது எந்தத் தரப்பிற்கும் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை ‐ பாரா மிஹிலார்: மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:





பாரா மிஹிலார் ‐ சிறுபான்மையினர் உரிமைகளுக்காகப் போராடும் சர்வதேச குழுவைச் சேர்ந்தவர்.


இன்று ஒரு முக்கியமான நாள். பெரும்பாலான இலங்கையர்கள் போல நானும் கொண்டாட வேண்டும். தமிழ்ப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பயத்தின் மத்தியில் கொழும்பில் வளர்ந்த ஒரு முஸ்லிம் நான்.

புலிகள் அறுபதாயிரம் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்தார்கள் அவர்களுடைய வாழிடங்களிலிருந்து. அவர்களுடைய பிரச்சாரம் மிகப் பயங்கரமானது.
ஆனால், நான் புலிகளின் பிரதேசங்களுக்குப் பிரயாணம் செய்யும் போது பொதுமக்கள் மிகப் பலம் பொருந்திய எதிரியை எதிர்கொள்கிறார்கள் என உணர்ந்தேன். நான் அங்கு சந்தித்த சிறுவர்கள் விமானப்படை விமானங்கள் தங்கள் வீடுகள் மீது குண்டு போடும் காட்சியை வரைந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

நூற்றுக்கணக்கான பெண்கள் தமது கணவன்மாரை இழந்திருந்தார்கள். அவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார்கள். அல்லது காணாமல் போயிருந்தார்கள். அல்லது கடத்தப்பட்டிருந்தார்கள். அதுவுமில்லாவிட்டால் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்கள். நாட்டின் இன்னொரு பகுதியின் வெளிவராத அருவருக்கத்தக்க ஒரு துயர் நிகழ்வு அது.

இவையெல்லாம் கற்பனை வரலாறு போல் உள்ளது. மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு மாபெரும் படுகொலையே நடந்து முடிந்திருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளாமல் எப்படி எனது மக்கள் எனது குடும்பத்தினர், எனது நண்பர்கள் தங்களது கண்களைத் தாங்களே மூடிக் கொண்டிருக்கிறார்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்ரனி கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் வெளியிட்டுள்ள புகைப்படடம்.



Monday, May 18, 2009

விடுதலைப் புலி தலைவர்களின் மரணம் குறித்த விஞ்ஞானபூர்வ சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ‐ இந்தியா

தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களின் மரணம் குறித்த விஞ்ஞானபூர்வ சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென இந்திய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமையை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தால், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் மற்றும் பெண்கள் பிரிவு தலைவி அகிலா ஆகியோர் 1991ம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளாக இந்திய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

மேலும்

பிரபாகரன் எங்கே பொட்டு அம்மான் எங்கே – புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதா கேள்விகளால் ஒரு வேள்வி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் புலனாய்வுத்துறையின் 2ம் நிலைத் தலைவர் கபில் அம்மான் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்க ஊடகங்கள் அரச சார்பு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இன்று இந்திய நேரம் பிற்பகல் என்டிரிவி தொலைக்காட்சிக்கு செவ்வியளித்த ராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டாரா என்பதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அது குறித்த அறிவிப்பு அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஊடகங்களையும் பாதுகாப்புத் தரப்பினரையும் மேற்கோள் காட்டி ஏஎப்பி, ரொயிட்டர், பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டுள்ளன. எனினும் பிபிசி வெளியிட்ட மற்றுமொரு செய்தியில் அரசாங்கத்தின் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

இன்றைய இலங்கை ஊடகங்களின் இரவுச் செய்தியில் புலிகளின் தலைவரோ புலனாய்வுத் தலைவரோ புலனாய்வுப் பிரிவின் 2ம் நிலைத் தலைவரோ கொல்லப்பட்டதான செய்திகள் எதனையும்; வெளியிடவில்லை.

அத்துடன் இலங்கைத் தொலைக்காட்சிகளில் அரசாங்கத்தினால் காட்டப்பட்ட புலிகளின் சடலங்களில் முக்கியஸ்தர்கள் எவருடைய சடலங்களையும் காணவில்லை என விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும்

புலிகளின் தலைவர் மரணமும் கொழும்பின் கொண்டாட்டமும் - படம் இணைப்பு










இவ்வளவு கோலகல கொண்டாட்டங்களுக்கிடையிலும் நான் பேசிய எனது நண்பர்கள் தொடக்கம் அனைத்து தமிழ் அன்பர்களும் சொன்னது இதுதான் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார்.அவர் நிச்சயமாக போராட்டத்தை தொடர்வார் - நம்புவோம் நம்பிக்கைதான் வாழ்க்கை